ஜனவரியிலிருந்து சிலாங்கூர் மந்திரி புசார், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரின் சம்பளம் உயர்கிறது.
இப்போதைய அவர்களின் சம்பளம் 87-இலிருந்து 373 விழுக்காடுவரை உயரும். சம்பள உயர்வுக்குச் சட்டமன்றம் இன்று ஒப்புதல் அளித்தது.
மிகப் பெரிய சம்பள உயர்வைப் பெறுபவர் சட்டமன்றத் துணைத் தலைவர். அவரது சம்பளம் ரிம3,327-இலிருந்து ரிம15,750ஆக கூடுகிறது.
மற்றவர்களின் சம்பளம் வருமாறு: (அடைப்புக் குறிக்குள் நடப்புச் சம்பளம்)
சட்டமன்றத் தலைவர் சம்பளம் ரிம22,500 (ரிம6,109.29). ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ரிம20,250 (ரிம6,109). சட்டமன்ற உறுப்பினர்கள் ரிம11,250 (ரிம6,000). மந்திரி புசார் ரிம29,250 (ரிம14,175)
இதுக்குதான் இவ்வளவு காலம் போரடிநீங்க்களா ?? நல்ல உயர்வு 373 % தேவைதான். BN போத்திகொண்டு படுத்தார்கள் , நீங்கள் படுத்துக்கொண்டு போத்திகொண்டீர்கள் !! மொத்தத்தில் – இரண்டும் ஒன்றுதான் . இன்னும் பல உண்டு ? யாருக்கு ? யாருக்குத் தெரியும் ??
ஏழைகள் வீட்டு அடுப்பில் பூனை தூங்கினால் உங்களுக்கு என்ன? உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வயிறு நிறைந்தால் எங்கள் வயிறும் நிறைந்த மாதிரிதான்!
சம்பளம் ஏறாத முன்பே, எதிர்கட்சிகளில் சீட்டுக்காக அடித்துக்கொண்டார்கள், இனிமேல் வெட்டுக்குத்துதான்.
ஏழைகள் பிச்சை எடுக்கிறார்கள் ,உங்களுக்கு சம்பள உயர்வு கேக்குதா ?,உடையாரே என்னமோ பண்ணுறாராம் ,குதிரைக்கு எளிசபெர்த் கேக்குதாம்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வாம் ,இதுக்குதான் நாக்காளிக்காக நாயை வீட படு கேவலமாக அடித்துக்கொண்டார்கள் ?? மொத்தத்தில் bn pkr ருக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிடும் போலிருக்கே ?!
இவர்கள் வெளிப்படையாக சம்பள உயர்வை பெறுகிறார்கள், ஆனால் பாரிசான் மந்திரி புசார்கள் ரகசியமாக பேரம் பேசி கோடிகணக்கில் கொள்ளை அடிக்கிறார்களே அது யாருடைய கண்ணையும் உறுத்தவில்லையா நண்பர்களே. கடந்த 5 ஆண்டுகளில் பல பில்லியன்களை மிச்சப்படுத்தி இது மக்கள் பணம் இந்த பணம் சிலாங்கோர் மக்களுக்கு தான் போய் சேரவேண்டுமென்று வெளிப்படையான ஆட்சி செய்கிறார்களே. உழைத்தவர்கள் அதற்கு தகுந்த வெகுமானம் பெறுவதில் தவறில்லையே, சத்தியம் தவறாத உத்தமன்போல் நடித்துக்கொண்டு ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் கூட்டம் பாரிசான் கொள்ளை கூட்டம். பல மந்திரிகள் பில்லியன் கணக்கில் கொள்ளையடித்து சேர்த்து வைத்து அவர்களின் பிள்ளைகள் இன்று ஏகபோக வாழ்க்கை வாழ்கிறார்களே, கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
ஆமாம்2….! மக்களுக்காக உழைக்க, அவர்களுக்காக தியாகம் புரிய வந்திருக்கும் நீங்களும் உங்கள குடும்பமும் பசியால் வாடலாமா?!
நல்ல அன்வார் இப்ராஹீம் எதிர்ப்பு தெரிவித்தார் ,சம்பள உயர்வி பற்றி விளக்க மளிக்க வேண்டும் என்று .அன்வார் இல்லை என்றால் மக்களை திருப்பி வைத்து கோலாட்டம் அடிதுவீடுவார்கள் .
மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரநிதிகள்,கடமைகாகத்தான் சம்பளமே தவிர சம்பளதிற்காக கடமையை செய்ய கூடாது,சிலாங்கூர் மாநிலத்தில் இந்த 6 வருடத்தில் எந்த ஒரு மேம்பாடும் காணவில்லை,வெள்ள பிரச்சனைக்கு குளம் வெட்டினார்கள் ஆனால் இன்னும் முழுமை பெறாமலும் இன்னும் பல பகுதிகளில் வெள்ள பிரச்சனை இருந்து கொண்டேத்தான் இருக்கின்றது.குப்பைகளை அள்ளாமல் ஆங்காங்கே குவியல் குவியலாக இருக்கின்றது,கொசு தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகின்றது,ஈக்களின் படையெடுப்பு வேறு,சாலைகள் எல்லாம் குழியும் மேடு பள்ளமாக இருக்கின்றது.நல்ல விசியம்த்தான் 200 கோடிக்கு மேல் மிச்ச படுத்தியது ஆனால் அந்த பணத்தை மக்களின் நல்வாழ்விற்கும் மேம்பாட்டிற்கும் இளைஞர்களின் ஆற்றலை வலர்க்கவும் பயன் படுத்தவில்லை ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுகாகத்தான் சேவை செய்ய வேண்டும் காரணம் அவர்கள் வகிக்கும் பதவிகள் யாவும் சேவை செய்வதற்காகவே என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்,இது ஒரு புறம் இருக்க ஆட்சி குழு உறுப்பினர்களை சந்தித்து பிரச்சனையை தெரிவிக்கலாம் என்று போனால்,அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதே இல்லை நம் பிரச்சனைகளை அவர்களின் உதவியாளர்களிடத்தில் மட்டுமே சொல்ல முடியும்.மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனையை தீர்க்கத்தான் ஆட்சி குழு உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஆனால் இவர்களையே சந்திக்க முடியவில்லை ( அவர்கள் மக்களை சந்திக்காமல் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும் ) பிறகு எதற்கு 373 சதவிதம் சம்பள உயர்வு ? மீட்டிங் போட்டு இதை செய் அதை செய் என்று கூறுபவர்களுக்கு 373 சதவித சம்பள உயர்வு,அதை செய்து முடிக்கும் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் அரை மாத போனஸ் மட்டும் தானாம் ….மக்களை செழுமையாக்குங்கள் நீங்களும் செழுமையாவீர்கள்…