சிங்கள அதிகார வர்க்கத்திற்கு விடுதலைப் புலிகள் அமைப்பு என்றும் அடிபணியவில்லை: சோசலிசக் கட்சி உறுப்பினர் புகழ்ச்சி

thilak_001விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போராளிகள் இடையில் மிகப்பெரிய போராளி என ஊடகவியலாளரும் முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினருமான திலக் கோதாகொட தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஏனைய தமிழ் அரசியல் அமைப்புகளை விட விடுதலைப்புலிகள் அமைப்பே அறிவுசார்ந்த மற்றும் தொழிலாளர் இடையில் சிறந்த சேர்க்கையை ஏற்படுத்தியது.

சிங்கள சிந்தனை மற்றும் தமிழ் சிந்தனை இடையில் இருக்கும் ஒரே வேறுபாடு இலங்கை சமூக யதார்த்த நிலையுடன் இருக்கும் விரோதமாகும்.

இந்த விரோதவாதத்திலேயே விடுதலைப் புலிகள் அமைப்பின் இலக்கும் அதன் கட்டமைப்பும் இருந்தது. அதுவே அந்த அமைப்புக்கு வழங்கிய தீர்வாக இருந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் அறிவுசார்ந்தவர்களும், போராளிகளும் இணையானவர்கள். ஒருவருக்கு ஒருவர் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அந்த அமைப்பில் கிடையாது.

எங்களுடைய கருத்துப்படி விடுதலைப் புலிகள் அமைப்பு உயர்ந்த அறிவுசார்ந்த ஒரு அமைப்பாகும். விடுதலைப் போராட்ட அமைப்பாக ஆரம்பத்தில் அந்த அமைப்பில் சில குறைப்பாடுகள் இருந்தன.

முஸ்லிம் மக்களை வெளியேற்றியது. சாதாரண மக்களை கொலை செய்தது போன்றவை அந்த அமைப்பில் ஆரம்பத்தில் இருந்தன.

இதனை நாங்கள் அவர்களிடம் காணப்பட்ட மனித நாகரீகம் தொடர்பான பிரச்சினையாகவே பார்க்கின்றோம்.

விடுதலைப்புலிகள் ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் அமைப்பாக உருவாகிய போதும் இறுதிப் போராட்ட சந்தர்ப்பம் வரும் போதும் அவர்களுக்குள் முதிர்ந்த விதமான பரிணாம வளர்ச்சி ஏற்பட்டிருந்தது.

அந்த பரிணாம வளர்ச்சியுடன் உலக பரிணாம வளர்ச்சியை அந்த அமைப்பு பெற்றது. விமான தாக்குதல், தற்கொலை தாக்குதல்களை நடத்தும் போதும் அந்த பரிணாம வளர்ச்சியுடன் சாதாரண மக்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டது.

அது அவர்களின் தந்திரோபாயமான நடவடிக்கை அல்ல. அது அவர்களின் செயற்பாடுகளுடன் பின்னப்பட்ட ஒரு நடவடிக்கையாக இருந்தது.

விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது 30 வருடகாலமாக ஒரு நிலப்பரப்பை ஆட்சி செய்த அமைப்பு. இறுதியில் உலகில் பலம்பொருந்திய நாடுகளின் உச்சளவான உதவியுடன் சிங்கள அதிகார வர்க்கத்தின் மிலேச்சத்தனமான பலத்துடன் அடிப்பணியாது போராடிய மன உறுதிக்கொண்ட அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு என்றார்.

TAGS: