பிஎன் இந்தியர்களின் நம்பிக்கையை இழக்கும் அபாயம் : வேதா எச்சரிக்கை

1-hindrafகோயில்கள் உடைக்கப்படுவது  தொடர்ந்தால்  பிஎன் அரசாங்கம்  இந்தியர்கள் அதன்மீது வைத்துள்ள நம்பிக்கையை  இழக்கும் அபாயம்  இருப்பதாக மலேசிய  இண்ட்ராப் இயக்கம்  எச்சரித்துள்ளது.

இண்ட்ராபுடன் செய்துகொண்ட  புரிந்துணர்வு ஒப்பந்தத்தை  பிஎன்னுக்கு நினைவுபடுத்திய  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி,  “மனம்போன போக்கில்” ஆலயங்களை உடைத்தெறிவதை நிறுத்திக்கொண்டு இண்ட்ராபுடன் பேச்சு நடத்தி அதற்குத் தீர்வுகாண முயல வேண்டும் என்றார்.

ஏப்ரல் 18-இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் காணப்பட்டபோது  பிஎன் தலைவர் ஒப்புக்கொண்ட பல்வேறு விசயங்களில் இதுவும் ஒன்றாகும் என வேதமூர்த்தி கூறினார்.