இலங்கைக் கடற்படையினர் இந்தியாவில் பயிற்சி பெற வருமாறு இந்திய கடற்படைத் தளபதி டி.கே. ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் தெற்கு துறைமுகப் பகுதியான காலேயில் நடைபெறும் சர்வதேச கடற்படை மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்காக ஜோஷி இலங்கை சென்றுள்ளார்.
அப்போது, இலங்கை அதிபர் ராஜபட்சவை சந்தித்து டி.கே. ஜோஷி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்புக்கு பிறகு இலங்கை அதிபர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்:
கடற்படை தொழில்நுட்பங்கள் தொடர்பான நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் பயிற்சியை இலங்கை கடற்படையினருக்கு அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இந்தப் பயிற்சியைப் பெற உலக அளவில் பெரும் போட்டி நிலவுகிறது. இதில், இலங்கைக் கடற்படையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சி தற்போது இந்திய வீரர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியக் கடல் பகுதியின் பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு இந்தியா தேவையா?
எலேய் இந்தியா….. !கடற்படை பிரிவில் நீ ஒரு கத்துக்குட்டி, நீ! கத்துக்கவேண்டியதோ நிறைய உள்ளது.இருந்தும் உனக்கு தெரிந்த மர்மக்கலையை சிலோன்காரனுக்கு பயிற்சி அளிக்க நீ ரொம்ப ரொம்ப பிரயாசப்படர வெரி குட். உன்னிடம் இருந்து சிலோன்காரன் கற்றுக்கொண்டு நாளைக்கு சீனாகாரன், பாகிஸ்தான்காரன், பங்களாகாரன் இவர்களோடு கூட்டுசேர்த்து உன்னை சுத்தி சூ………போவது வெகு தூரமில்லல……. ?ம் ம் ம் ம் ம் ம் ம் ம் யப்பா !பிரம்மபுத்ரா குறுக்கே அணை எழுப்புவதாக சொல்லப்படுகிறதே மாப்பிளைக்கு தெரியுமில்லே ?
சிறிலங்காவின் வாயை அடைக்க இந்திய முயல்கிறது! ஈழ போரில் இந்திய தமிழனுக்கு எதிராக செய்த சதி வேலைகளை மூடிமறைக்க பல வழிகளில் செயல் படுகிறது! போர் குற்றங்களுக்கான சர்வ தேச விசாரணை விரைவில் நடக்கவிருப்பதால் இந்திய சிறிலங்காவுடன் மீண்டும் மீண்டும் தமிழனுக்கு எதிராக சதி வேளைகளில் மும்முரமாக இடுபடுகிறது.
நற்பை எதிர் பார்க்கிறது.