இலங்கையில் இணைந்த வடக்கு-கிழக்கு பிராந்தியத்தில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பெற்று கொடுக்கப்படும் என்ற இந்திய அமைச்சர் சிதம்பரத்தின் கருத்துக்கு இலங்கை அரசு காட்டமான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு உரிமை கிடையாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
‘இலங்கை தனி இறையாண்மை கொண்ட ஒரு நாடு, இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகள் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில், ‘வாக்கு சேகரிக்கும் நோக்குடன்’ அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துக்களை இலங்கை பெரிய அளவில் கணக்கில் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தமிழோசையிடம் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பு குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்ற அமைச்சர், ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன செய்துகொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி தற்காலிகமாகவே வடக்கு கிழக்கு பிராந்தியம் இணைக்கப்பட்டதாகவும் கூறினார்.
பின்னர், வடக்கு கிழக்கு இணைப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னர், அதுபற்றி பேச எவருக்கும் உரிமை கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
‘முதலில் இந்தியாவின் பிரச்சனையை தீருங்கள்’
‘எங்கள் நாட்டு மக்களுக்கு பயன்படுத்த கழிப்பறைகள் இருக்கின்றன. முதலில் அவர்களை அவர்களின் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கச்சொல்லுங்கள். எங்கள் நாட்டுப் பிரச்சனைகள் பற்றி அவர்கள் பேசவேண்டியதில்லை. அவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்றும் இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த் கூறினார்.
‘கனவுலகில் இருந்துகொண்டு அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் சிதம்பரத்தை முதலில் இங்கு வந்து நிலைமையை பார்க்கச் சொல்லுங்கள். தென்னிந்தியாவை விட வடக்கு-இலங்கையிலுள்ள மக்கள் நல்ல வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்’ என்றும் இலங்கை அரசாங்கம் சார்பில் பேசவல்ல அதிகாரியான சுசில் பிரேம்ஜயந்த் கூறினார். -BBC
இதுவும் வேண்டுமட உனக்கு இன்னுமும் வேண்டுமட, பாடல் ஞாபகம் வருது.
யோவ் சிதம்பரம்! என்னையா சொல்ல போறே? உங்க ஊருலே கழிவறை இல்லையாம்! முதல்லே அதுக்கு ஒரு வழி பண்ணு எங்கயாவது பொய் அவசரத்துக்கு வெட்டியா தூக்கிராதே,சிங்களவன் அப்படியே போட்டோ எடுத்து இண்டர்நேட்லே போட்டுருவான் கவனம்!
யாழ்பானதான் ஒரு வார்த்தை அடிக்கடி சொல்வான், வேசி மகனே ! இந்த வார்த்தையை சொல்ல விரும்பவில்லைதான் , ஆனா , டேய் வேசி மகனே- ராஜபக்ஷே பண்ணி , ஜப்பான் காரன் ,அமேரிக்கா காரன் மற்ற நாட்டுமேல குண்டுபோடும் போது, எந்த வேமாநியையும் கேட்டுக்கிட்டு குண்டு போடல , அதுபோல உன்னோட தலையிலும் ஒரு நாளைக்கு குண்டு விழும் , காத்திருடா!!
இந்தியா யாரை ஆதரிக்க வேண்டுமோ அவர்களை தான் ஆதரிக்க வேண்டும் ,இறையாண்மை என்றால் என்ன என்று தெரியாதவனை ஆதரித்தால் இதுதான் நிலைமை, என்றுமே இந்தியாவின் நேசம் தமிழ் ஈழம் என்பதே நிதர்சனம் ,ஈழம் மலரும் காலம் கனிகிறது ,இந்தியா ஈழத்தை அனைக்கும் தருணமிது ,[ இந்தியர்களே ஆதரவு கொடுங்கள் மலரட்டும் தமிழ்ஈழம் ].
ஒழுங்கா கழிவறைகள் கட்டத் தெரியா இந்திய மத்திய மாநில அரசுகளாலும், கட்டிய ஒரு சில கழிவறைகளை ஒழுக்காகப்
பாவிக்கத் தெரியா மக்களாலும் இந்தியாவின் தன்மானம் (அப்படி ஒன்று இருந்தால்?!) கடும் வெய்யிலில் கரிந்துக் கொண்டு இருக்கிறது.
13வது திருத்தத்தில் வடக்கு-கிழக்கு இணைப்புக் குறித்து ஒன்றும் சொல்லப்படவில்லை என்பது புது விடயமாக இருக்கிறது..!! இது உண்மையா..?! இதற்கு நயவஞ்சக-பாசாங்கு கலை நிபுணன் இந்தியாவின் பதில் என்னவோ?!
மானமுள்ள தமிழர்கள் இந்த தமிழ் நாடு என்று சொல்கிறார்களே அந்த பக்கமே போகதிர்கள் ,இது தமிழர்களுக்கு மட்டுமே
இவன் கத்தியே attake வந்து சாகபோறன் .