இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றவுள்ளதாக அரசாங்கம் நாடகமாடி வருகிறது: மீள்குடியேற்ற குழு தலைவர்

people060யாழ்.வலிகாமம் வடக்கிலிருந்து 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றவுள்ளதாக அரசாங்கம் மற்றும் அரசாங்க அதிகாரிகள் நாடகமாடி வருவதாக வலி,வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார்.

விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட் டிருப்பதாவது,

வலிவடக்கில் இருந்து 1990 இல் இடம்பெயர்ந்து பல பிரதேசசெயலக பிரிவுகளில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 23 வருடங்களில் அரசாங்க
அதிபர், பிரதேச செயலகம் ஊடாக கிராம சேவையாளர்களினால் வலி வடக்கில் மீளகுடியேற்ற வேண்டிய மக்களின் விபரங்கள் பல முறை எடுக்கப்பட்டிருந்தது.

மேற்படி எடுக்கப்பட்ட தகல்களின்படி 7500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறுவதற்காக பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். இம் மக்கள் தெல்லிப்பளை, சண்டிலிப்பாய், உடுவில், கோப்பாய், நல்லூர், கரவெட்டி, பருத்தித்துறை, ஆகிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகாம்களிலும் தனியார் வீடுகளிலும் பிற இடங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

அண்மையில் பிரித்தானிய பிரதமரின் வருகையின் போது அவருக்கு தெரியப்படுத்துவதற்காக அரசாங்க அதிபரால் மீள் குடியேற்றப்பட வேண்டிய குடுபங்களின் எண்ணிக்கை 1000க்கணக்காக குறைக்கப்பட்டு 5818 ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 4 மாதங்களுக்கு முன்பு முகாம்களில் உள்ள மக்களின் இடம்பெயர்தோருக்கான குடும்ப அட்டையை நிரந்தர அட்டையாக மாற்றுவதற்கான
நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இவ் நடவடிக்கைகள் மேற்கொள்பட்ட வேளை எம்மால் எதிர்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று வரும் ஜ.நா வுக்கான இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைக்கான பிரநிதிக்கும் இவ்வாறான தவறான விபரங்களை காட்டுவதற்கான
நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

வலிவடக்கு மக்களின் வாழ்வுரிமையில் அடிக்கவேண்டாம் என சம்பந்தபட்வர்களை கேட்டுக் கொள்வதோடு இவ்வாறான செயல்களை வன்மையாக
கண்டிக்கிறேன்.

இன்றும் கங்கேசன்துறை பகுதியில் வீடமைப்பு நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ச. சஜீவன்,
வலிவடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு குழு.

TAGS: