விடுதலைப் புலிகள் குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும்!- சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை

suresh-premachandran 1போர் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் எதிர்கால நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும், விடுதலைப் புலிகள் என்ற பெயரைப் பயன்படுத்தும் முறையை அரசாங்க தரப்பினர் கைவிட வேண்டும் அதேவேளை, வடக்கின் வசந்தம் மூலம் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனினும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதத்தில் வடக்கில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதேநேரம் முல்லைத்தீவு முத்தையன் கட்டு பகுதியில் படையினர் வசமும் சுமார் 2 ஆயிரம் கறவைப் பசுக்களை மீட்டு, வறுமையில் வாடும் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

வன்னியில் கல்லுடைப்பு பணிகள் உரிய முறையில் செயற்படுத்தப்படாமையால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.

அதேநேரம் பலாலி வானூர்தி தளம் உரிய முறையில் செயற்படுமாக இருந்தால் இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: