இலங்கையின் மனிதவுரிமை நிலைமை குறித்த பிரித்தானியாவின் காலக்கெடு தொடர்ந்தும் நீடிக்கின்றது!

william_hagueஎதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னேற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லையென பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் இதனை தெரிவித்துள்ளார்.

இதனை இலங்கை அரசாங்கம் செயற்படுத்த தவறினால் ஜெனீவா மாநாடு கூடும்போது இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை பிரித்தானியா வலியுறுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து நம்பிக்கையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியா கோரியிருந்தது.

இந்தநிலையில், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பிரித்தானியாவின் உறுதியான நிலைப்பாட்டை பொதுநலவாய மாநாட்டின் போது வெளிப்படுத்தினார் எனவும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

TAGS: