அரசாங்கத்தின் போர்ச் சேத கணக்கெடுப்பு குறித்து கத்தோலிக்க தமிழ் மதகுருமார் சந்தேகம்!

mullivaikkaal_murdersபோரினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து இழப்புக்கள் குறித்து அரசாங்கம் மேற்கொள்ளும் கணக்கெடுப்பை கத்தோலிக்க மற்;றும் தமிழ் நடவடிக்கையாளர்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.

குறிப்பாக இரண்டு இனங்களினதும் மதகுருமார் இந்த நடவடிக்கையை சந்தேகத்துடன் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்த கணக்கெடுப்பை தனித்து மேற்கொள்வதன் காரணமாகவே இந்த சந்தேகம் ஏற்பட்டு;ள்ளதாக மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டதுமான சம்பவங்களை மறைப்பதற்காக ஜனாதிபதியினால் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு;ள்ளது.

இந்தநிலையில் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு, சர்வதேச அழுத்தம் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு என்று கத்தோலிக்க மதகுருமார் குறிப்பிட்டுள்ளனர்.

1983ம் ஆண்டில் இருந்து 2009 ம் ஆண்டு வரையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து மேற்கொள்ளப்படும் இந்த கணக்கெடுப்பு கடந்த நவம்பர் 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதில் 16 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

TAGS: