போர் குற்றம் சுமத்தும் கெலும் மக்ரே முடிந்தால் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைக்கட்டும்: சவேந்திர சில்வா சவால்

shavendarsilva001போர் குற்றங்களை சுமத்தி வரும் சனல்  தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே, முடிந்தால் நீதிமன்றத்திற்கு சென்று சாட்சியங்களை முன்வைக்குமாறு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சவால் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கெலும் மக்ரே தனது ஆவணப்படங்களை சகல இடங்களிலும் திரையிட்டு விட்டு அமெரிக்காவுக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் நான் முன் வைத்த விடயங்கள் காரணமாக அதிர்ந்து போனார்.

மரங்கொத்தி பறவை சகல மரங்களை கொத்திய பின் இறுதியில் வாழை மரத்தில் கொத்திய கதையே அவருக்கு நேர்ந்துள்ளது.

இலங்கை இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்ட என்று கூறி உலகம் ஆவணப்படங்களை திரையிட்டு வரும் மக்ரே ஏன் நீதிமன்றத்திற்கு சென்று சாட்சியங்களையும் ஆதாரங்களையும் முன்வைப்பதில்லை. இது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

நான் ஆதாரங்களுடன் இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டு பொய்யானது என்பதை உறுதிப்படுத்தினேன்.

நான் அமைதியாக இருக்க போவதில்லை. தேவையான நேரத்தில் இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் முற்று முழுதான பொய் என்பதை நிரூபிப்பேன்.

சனல்4 தொலைக்காட்சியின் கெலும் மக்ரே தான் இராணுவப் பயிற்சியை பெற்றவர் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

TAGS: