மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு எதிராக அறிக்கை

geniva_meeting_004மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு எதிராக அறிக்கை ஒன்றை தயாரித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இந்த அறிக்கையில் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை மையமாகக் கொண்டு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

போரின் பின்னரும் வடக்கில் படையினரும் அரசாங்கமும் காணிகளை ஆக்கிரமித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டமை குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாணசபை நிறுவப்பட்டுள்ள போதிலும், மத்திய அரசாங்கம் தலையீடு செய்து வருவதாக தெரிவிகப்படுகிறது.

TAGS: