ஜேர்மனியில் மக்கள் நிரந்தர தீர்ப்பாயம் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஆராய்வு

killing_002ரோம் நகரை தலைமையகமாக கொண்ட மக்கள் நிரந்தர தீர்ப்பாயம், இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகள் முன்வைக்கும் யுத்த குற்றச்சாட்டுகளை ஆராயும்
நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

தற்போது தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வு ஜேர்மனியின் – பர்மன் நகரில் இடம்பெற்று வருகின்றது.

மக்கள் நிரந்தர தீர்ப்பாயம், இலங்கை மற்றும் இங்கு வாழும் தமிழ் மக்கள் தொடர்பாக கடந்த முதலாவது கட்ட விசாரணைகளை கடந்த 2010 ஆம் ஆண்டு நடத்தியிருந்தது. அதன் இரண்டாம் கட்ட விசாரணை நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பாக தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் வலுவடைந்தமை காரணமாகவே குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சில சர்வதேச நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 புத்திஜீவிகள் அறங்கூறுனர் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

குறித்த முறைகாண் ஆயத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நேற்றைய தினம், சனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட “போர்தவிர்ப்பு வலயம்” காணொளியும் அறங்கூறுனர் சபையின் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது.

TAGS: