ஜெனிவாவில் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டுக்கு முன்னதாக, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தில் திருத்தங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மாஹாநாம ஹேவா தெரிவித்தார்.
அவர் மேலும்தெரிவிக்கையில்,
மேற்கொள்ளப்பட உள்ள புதிய திருத்தங்கள் ஜனாதிபதிக்கும், நீதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் தற்காலத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அமுலில் இருக்கும் சட்டத்தின் படி ஆணைக்குழுவினால் பரிந்துரைகளை மட்டுமே முன்வைக்க முடியும். இதனால் நேரடியான அழுத்தங்களை கொடுக்கக் கூடிய வகையில் சட்டமூலம் திருத்தப்படுகிறது.
இந்த திருத்தம் நிறைவேற்றப்படுவதன் மூலம் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் மனித உரிமை குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க முடியும் என்றார்.