வட மாகாண சபையின் இரண்டு கோரிக்கைகளையும் அரசாங்கம் நிராகரிப்பு

northern_council_001வட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

வட மாகாண சபையின் நிர்வாகம் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில் இரண்டு தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு பதிலாக தமிழர் ஒருவரை மாகாண ஆளுனராக நியமிக்க வேண்டும், வடக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கத்தினால் இந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. கே. சர்வேஸ்வரன் என்ற உறுப்பினரால் இந்தத் தீர்மானம் வழிமொழியப்பட்டுள்ளது.

வடக்கின் ஆளுனராக வடக்கைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. எனினும், இந்தக் கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

TAGS: