தமது அரசியல் நோக்கத்துக்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், இலங்கை மீனவர்களை பணயக் கைதிகளாக வைத்துள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத்குமார வீரக்கோன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்திய மீனவர் சமூகத்தின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே இலங்கை மீனவர்களை ஜெயலலிதா தடுத்து வைத்துள்ளதாக வீரக்கோன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் கோரிக்கையாக உள்ளது. இதனை உறுதிப்படுத்திக்கொள்வற்காகவே அவர் தமிழக மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவதற்கு அனுமதிக்கிறார்.
எனவே இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலையிட வேண்டும் என்று பிரதியமைச்சர் கேட்டுக்கொண்டார்.