‘தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை’ என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஜஸ்வந்த் சின்ஹா தனது கட்சியின் கூட்டம் ஒன்றில் புதனன்று தெரிவித்துள்ளார். இக் கருத்தானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் சூடான கருத்தாகவும், அதிக ஊடகங்களிலும் இக் கருத்து வெளியாகியுள்ளது. இது பாரதீய ஜனதா கட்சியின் நிலைப்பாடா தெரியவில்லை. ஆனால் 2014ல் வரவுள்ள தேர்த்தலில் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியை அமைக்கும் என்று பல கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இன் நிலையில் ஜஸ்வந்த் சின்ஹாவின் இக் கருத்தும் வெளியாகியுள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வை எட்டுதல் தொடர்பாக பாரதிய ஜனதாக் கட்சியின் ஒன்றுகூடலில் விவாதிக்கப்பட்ட போது, தற்போது இந்த நிலை வேறுபட்டுள்ளது என்பதை ஜஸ்வந்த் சின்ஹா வலியுறுத்தியுள்ளார். “ஈழம் என்பது மிகக் கிட்டிய தூரத்தில் உள்ளது. தற்போது பங்களாதேஸ் சுதந்திர நாடாக மாறிவிட்டது. இதேபோன்று வடசூடான் மற்றும் தென்சூடான் ஆகியனவும் தற்போது சுதந்திரமடைந்துவிட்டன” என ஜஸ்வந்த் சின்ஹா தனது விவாதத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளார். தனது உரையின் போது, கச்சதீவை இந்தியா மீண்டும் தனக்குச் சொந்தமாக்க வேண்டும் எனவும் இதன்மூலம் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகள் நிச்சயப்படுத்தப்பட்டு அவர்களுக்கான மீன்பிடி எல்லைகள் மீளவரையறுக்கப்பட முடியும் எனவும் சிறிலங்காக் கடற்படையால் இந்திய மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது தடுக்கப்பட முடியும் எனவும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஜஸ்வந்த் சின்ஹா சுட்டிக்காட்டியுள்ளார்.
“கச்சதீவை நாம் மீளப்பெற்றால் எமது மீனவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இதன்மூலம் இந்தியக் கடற்பரப்பை நாங்கள் கட்டுப்படுத்த முடியும்” என இவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். “எமது மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பில் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என இந்தியா சிறிலங்காவிடம் கூறவேண்டும். நீங்கள் ஒரு பலவீனமான அரசாங்கமாக இருந்தால், இதன்மூலம் அனைவரும் தமக்கான நலன்களைப் பெற்றுக் கொள்வார்கள். இந்தியாவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையானது குழப்பமானதாக உள்ளது. நாட்டின் எதிர்காலம், அதிகாரம் மற்றும் உறுதித்தன்மை போன்றன ஆபத்திற்கு உள்ளாகலாம். தற்போது இந்தியாவை ஆளும் அரசாங்கமும் பிரதமரும் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் இந்திய மக்கள் பலவீனமானவர்கள் அல்ல” என ஜஸ்வந்த் சின்ஹா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“எமது அயல்நாடான சிறிலங்காவின் வடக்கில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் தான் பொறுப்பு என்பதை மக்களிடம் வீடுவீடாகச் சென்று எடுத்துக்கூற வேண்டும்” எனவும் தனது உரையின் போது முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சின்ஹா வலியுறுத்தினார். தமிழ் நாட்டில் ஜெயிக்க பாரதீய ஜனதா இப்படி ஒரு தளத்தைப் போடுகிறதா ? இல்லை ஆத்மாத்தமாக தான் செயல்படுகிறதா விடை சீக்கிரம் கிடைத்துவிடும்.
“ஈழம் என்பது மிகக் கிட்டிய தூரத்தில் உள்ளது”…
– கனவு மெய்பட வேண்டும்…பாரதி
தாமரைக்கு வாழ்த்துக்கள் ,ஈழத்தின் நேசம் ,வெற்றியை நோக்கி பயணிக்கிறது , [ இந்திய தடாகத்தில் மலரட்டும் மோடி என்ற இளந்தாமரை ],முன்னேறுவோம் ஈழம் நோக்கி [ இந்தியர்களே ஆதரவு கொடுங்கள் மலரட்டும் தமிழ்ஈழம் ].
தமிழ் ஈழம் அமைவது உலகத் தமிழர்களுக்கெல்லாம் பெருமை.இணையத்தின் மூலம் கணக்கெடுப்பு எடுத்து ஐ, நா வுக்கு அனுப்பவேண்டும்.
இதை கேட்பதற்கு மனதிற்கு இதமாக இருக்கிறது.
பாரதிய ஜனதா வரப்போகும் லோக் சபா தேர்தலை எண்ணி இப்படி இவரை பேசவிட்டிருக்கலாம். கடந்த காலங்களில் ஈழ இறையாண்மையை இறுக்கிப் பிடித்துக்கொண்ட இக்கட்சியின் முக்கிய தலைவர்கள் ஈழம் மலர்வதற்கு சாதகமாக இருந்தது இல்லை. இவரது பேச்சு மனப்பூர்வமானதோ இல்லையோ, இதனால் வட இந்தியாவில் ஈழம் மலருவதற்கான நியாயத்தை அனேகர் இப்பொழுது சாதகமான கண்ணோட்டத்தில் பார்க்க இயலும். நமக்கு ஒரு +.
ஈழம் மலர யார் என்ன சொன்னாலும் நாம் நம்பனும் வரவேற்கணும்.
ஆசாமி வாய் வார்த்தையல்ல ,சாமி சொன்ன வார்த்தை ………………………….
Pakistan ஒருபக்கம் துளைக்கிறான் , china மறுப்பக்கம் உதைக்கிறான் , தெற்க்கே
ஸ்ரீலங்கா கொட்டுகிறான் .இந்தியாஉக்கு வீரமே கிடையாதா? மானமாவது இருக்கவேண்டும் . விவேகமாக செயல்படவேன்டாமா ??
பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் என்றால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் தங்களது கொள்கைகளை உடனே மாற்றிக்கொள்ளுவார்கள்! அதிலே அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. தமிழ் ஈழத்திற்கு ‘ஜே’ போடுவார்கள்!
ஈழம் பிறந்தால் மட்டும் தமிழன் ஒற்றுமையா நாட்டை ஆண்டுவிடுவானா? தமிழ்நாட்டை ஆள வக்கில்லாதவர்கள்தானே தமிழர்கள். இலங்கையில் என்ன நடக்கிறது? யாழ்ப்பானத் தமிழன் ஆட்சி இல்லாதபோதே அங்குள்ள இந்திய தமிழர்கள் 10 இலட்சம் பேரையும் தமிழ் முஸ்லிம்களையும் மதிப்பதில்லை. அவர்கள் அங்குள்ள தேயிலை தோட்டங்களில் அடிமை வாழ்க்கை வாழ்கின்றார்கள். அவர்களைப் பற்றிய எந்த அக்கறையும் அனுதாபமும் நாம் ஆதரிக்கும் ஈழத் தமிழர்களுக்கு இல்லை. மலையக்த் தமிழர்களை கீழானவர்களாக எண்ணி இவ்வளவு நாளும் இன்றும் ஒதுக்கி வாழும் இவர்களா தமிழ் ஈழம் மலர்ந்ததும் தாய் தமிழர்களுக்கு நல்லது செய்வார்கள். நாம் வாழும் நாட்டிற்கு விசுவாசமாக (கட்சிக்கல்ல) இருந்து உண்மையாக உழைத்தாலே நாம் மேன்மை அடையலாம். அதற்கும் உலகெங்கும் வாழும் யாழ்ப்பானத் தமிழர்களே முன்மாதிரி. நம் நாட்டிலும் ஆனந்த கிருஸ்ணன், டோனி பெர்னண்டஸ், ரேவம் நவ, சிவ சுப்பிரமனியம், தில்லைநாதன், போன்ற எண்ணற்றவர்களே ந்ல்ல எ.க.