இலங்கைக்கு போர்கப்பல் வழங்கும் விவகாரம்: மதுரை கோட் அதிரடி உத்தரவு !

madurai-court-shipஇந்திய அரசு இலங்கைக்கு அதிநவீனரக போர்கப்பல் இரண்டை வழங்கவுள்ளது. இந்திய மீனவர்களை சுட்டும் மற்றும் உயிருடன் கைதுசெய்துவரும் இலங்கை கடற்படையினருக்கு ஏன் இந்தியா போர்கப்பல்களை கொடுக்கவேண்டும் என்று கோரி சிலர் மதுரை நீதிமன்றில் வழக்கு தொடுத்துள்ளார்கள். இலங்கைக்கு போர்கப்பல்களை வழங்க இந்திய மத்திய அரசுக்கு தடைவிதிக்கவேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இதனை விசாரித்த மதுரை நீதிமன்றம் நேற்றைய தினம் அதிரடியாக அதனை விசாரிக்க ஏற்றுகொண்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சு, இந்திய பாதுகாப்பு அமைச்சு மற்றும் எல்லை காப்பு படையின் அதிகாரிகளுக்கு, இது தொடர்பாக மதுரை நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது. இதற்கான விளக்கத்தை அவர்கள் கொடுத்தாகவேண்டும் என்ற நிலை தற்போது தோன்றியுள்ளது.

தமிழக மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசு செயல்படுகிறது என்று மதுரை உயர்நீதிமன்றம் நம்பினால், இலங்கை அரசுக்கு போர்கப்பல்களை வழங்கவேண்டாம் என்ற உத்தரவை அது பிறப்பிக்க கூடும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அதற்கு எதிராக , டெல்லி உச்சநீதிமன்றில் மத்திய அரசு மனுதாக்கல் செய்ய நேரிடும் என்று , தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். காங்கிரஸ் அரசு தற்போது உள்ள சூழ்நிலையில் இதுபோன்ற சிக்கலில் மாட்டித்தவிக்க விரும்பாது என்றும் கூறப்படுகிறது.

எது எவ்வாறு இருப்பினும், மதுரை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட விடையம் சிங்கள தலைவர்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. பல சிங்கள ஊடகங்கள் இச்செய்திக்கு முன்னுரிமை கொடுத்து பிரசுரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

TAGS: