பிரபாகரனுடன் இரகசியப் பேச்சு நடத்திய தமிழக அரசியல்வாதிகள்: அம்பலப்படுத்தவுள்ளதாம் இலங்கை

prabakaran_001விடுதலைப் புலிகள் செய்த போர்க்குற்றங்கள், நிதி சேகரிப்பு, ஆயுதங்களை பெற்றுக்கொண்ட பல நாடுகள், பல நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் பற்றிய உண்மையான தகவல்களை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் வெளியிடுவது என அரசாங்கம் தீர்மானத்துள்ளது.

புலிகளின் சகல செயற்பாடுகளும் அடங்கிய 8 காணொளிகளை அதிகாரிகள் தயாரித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த காணொளிகளின் பிரபாகரனுடன் இரகசியமான பேச்சுக்களை நடத்திய தமிழக அரசியல்வாதிகள், அவர்கள் இரகசியமான முறையில் வன்னிக்கு வந்தமை தொடர்பான காட்சிகளும் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.

வன்னியில் மீட்கப்பட்ட ஆயுதங்கள், அந்த ஆயுதங்களை தயாரித்த நாடுகள் மற்றும் அதன் தயாரிப்பு இலக்கங்கள் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினர் தெரிவித்தனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் புலிகளுக்கு சொந்தமான ஆயிரத்து 400 மில்லியன் பெறுமதியான ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

அதேவேளை போர்க்குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட புலிகளின் 20 உறுப்பினர்கள் அமெரிக்கா, கனடா, நோர்வே, பிரித்தானியா, சுவிஸர்லாந்து, சுவிடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருப்பதாகவும் அவர்களின் தகவல்களையும் வெளியிடப் போவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

TAGS: