அரசாங்கம் அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறது என்பதை பிஎன் கப்பாளா பத்தாஸ் எம்பி ரீசல் மரைக்கான் இன்று நினைவுப்படுத்தினார். பிஎன் அதன் தேர்தல் அறிக்கையில் டோல் கட்டணத்தைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“நகரங்களுகிடையிலான டோல் கட்டணத்தைக் கட்டம் கட்டமாகக் குறைக்க பிஎன் வாக்குறுதி அளித்தது”, என ரீசல் மரைக்கான் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இதைக் கவனிக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
டோல் கட்டணம் எந்த விகிதத்தில் அமைந்திருந்தாலும் அதனால் மக்களுக்குத் தொல்லைதான் என்றவர் கூறினார்.
பரவாயில்லை! மரைக்காயர் கொஞ்சம் நல்ல செய்தியைக் கொடுத்திருக்கிறார்! அண்ணாச்சி சொன்னதை அம்னோ அரசாங்கம் காதில் போட்டுக் கொள்ளுமா என்று பார்ப்போம்!
வெட்கம் இல்லாமல் பொது மக்களிடம் சொல்லும் பாராளுமன்ற உறுப்பினரே, இதையே உமது கட்சித் தலைவர்களிடம் சொல்லி நாட்டாமைத் தீர்ப்ப மற்றச் சொல்லுங்களேன். ஏன் முடியாதா? தைரியமில்லையா? இது நீதிக்கு எதிரான செயல் இல்லையா? லிம் எங் குவானை சர்வாதிகாரி என்ற நீர், உம் கட்சித் தலைவரை பொய்யர் என்று கூற நா கூசுகின்றதோ?
மரைக்கான் எப்படி மலாயக்காரனாகி,
உம்னோ உறுப்பினராகி,
தேர்தலில் போட்டியிட்டு ‘எம்.பி.’
ஆனான் என்று எனக்கு இன்றும் குழப்பமாகத்
இருக்கிறது!!
பாருங்களேன்…..இனிமேல் இந்த ஆளிடமிருந்து எந்த அறிக்கையையும் பார்க்கமுடியாது. இந்நேரம் அவனுக்கு நஜிப் ஒரு வாயிலே ஒரு பிளாஸ்திரி போட்டிருப்பார். ….கடிதமும் போயிருக்கும்!! இந்நேரம் umno -காரர்கள் அவனுக்கு காதிலே சங்கு ஊதிகொண்டிருப்பார்கள்!!! என்ன ஈனப் பொழப்படா இது!?