த.தே.கூட்டமைப்பை தடை செய்யுமாறு கோரிக்கை

tna_members_002தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்யுமாறு தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அவர்களின் கொள்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரப்புவதாக அவர் குற்றம் சாட்டினார்.

2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் 3வது வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்கம் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் புலிகளின் பினாமிக் கட்சிகளை தடை செய்திருக்க வேண்டும். அவ்வாறு தடை செய்யாது விட்டது தவறு என்று தற்போது தான் புரிகிறது.

பிரிவினை வாதம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரம் செய்து வருகிறது.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஹிட்லரின் நாஸிக் கட்சி தடை செய்யப்பட்டது. கம்போடியாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் பொல் பொட்ஸ் கொம்யூனிட்ஸ் கட்சி ( Pol Pot’s Communist Party) தடை செய்யப்பட்டது.

அதேபோல், இலங்கையில் பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் பரப்பி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்றார்.

TAGS: