அம்னோ தலைவர்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும். தீவிரவாத கருத்துகளைச் சொல்லி வாக்காளர்களை விரட்டி அடித்து விடக்கூடாது என மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் கூறினார்.
சீன மலேசிய வாக்காளர்கள் பிஎன்னை ஆதரிக்கவில்லை என்பதால் அதிருப்தி அடையும் அம்னோ தலைவர்கள், மலேசியர்களின் மொத்த நலனை எண்ணாமல் தங்கள் இனத்துக்காக மட்டுமே பேராட முனைந்தால் அது மேலும் பல சீன வாக்காளர்களை விரட்டி அடிக்கும் என்றார்.
“மலாய்க்காரர்-அல்லாத மற்றவர்களும்கூட அதனால் விலகிச் செல்லக்கூடும். அதுவே பிஎன்னுக்கும் முடிவு கட்டும்”. இன்று மசீச இளைஞர் பகுதி ஆண்டுக்கூட்டத்தில் வீ இவ்வாறு பேசினார்.
உண்மையை இப்போதாவது துணிந்து பேசுங்கள்
சரியாகச் சொன்னீர்கள். அம்னோ மலாய்க்காரனக்கு மட்டும் உதவுவேன் என்று ஒரு வழிப் பாதையைக் கடைப் பிடித்தால் பாரிசானை விரட்டி அடிப்பதைத் தவிர வேறு வழி என்ன?
எங்க கிட்டயே கரடி விடுறியா?
நான் எழுதிய கருத்துக்கு மொட்டை அடித்து விட்டார்கள்!!!
இவங்கள் மட்டும் அப்போதே உறுதியுடன் இருந்திருந்தால் அம்னோ இவ்வளவு தூரத்திற்கு வந்திராது.
வாயிலே பிளாஸ்டர் போட்டு ஓட்டிகிட்டு பேசுவது போல நடிக்கிறான்.
ம.சி.ச. தேர்தல் முடிந்த உடன் பழைய குருடி கதவ திறடி என்ற கதைதான் மிஞ்சும். பாருங்களேன்!.