மாட் சாபு: ஜாஹிட்டுடன் தனிப்பட்ட முறையில் பகை ஏதுமில்லை

Mohamad-Sabuஉள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி,  தம்மை ஷியா கொள்கைகளைப் பின்பற்றுபவர் என்று குற்றம்சாட்டி அதற்கு “10 சான்றாதாரங்களை” முன்வைத்திருந்தாலும்கூட அவருக்கும் தமக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது என பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு கூறினார்.

மாட் சாபு  என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் அவர், அரசியல் வேறுபாடு இருந்தாலும் அம்னோ தலைவர்களுடன் எப்போதுமே நட்பு உண்டு என்றார்.

“தனிப்பட்ட பகை கிடையாது. எல்லாருடனும் நல்ல உறவு உண்டு”, என்றவர் ரேடியோ பங்சார் உத்தாமாவின் நேர்காணலில் கூறினார்.