ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதில் பிரிட்டன் ஆர்வம்!

Hugo_Swireஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற பிரிட்டன் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மர்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக பிரிட்டனின் பொதுநலவாய நாடுகள் விவகார அமைச்சர் ஹியுகோ ஸ்வெயர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைமைகள் குறித்து பொதுநலவாய நாடுகள் அமைப்பு உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றது.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இவ்வாறு பேசப்பட்டு வருகின்றது.

எவ்வாறான தீர்மானமொன்றை முன்வைப்பது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முயற்சிக்கு உறுப்பு நாடுகளின் ஆதரவு திரட்டப்படும்.

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே பிரிட்டனின் நிலைப்பாடாகும்.

குற்றச் செயல்கள் தொடர்பில் மார்ச் மாதத்திற்கு முன்னதாக நம்பகமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஸ்வெயர் தெரிவித்துள்ளார்.

TAGS: