மசீச தேசிய இளைஞர் ஆண்டுக்கூட்டமும் கட்சித் தேர்தல்களும் இன்று தொடங்கின.
இளைஞர் பகுதியில் 34 பதவிகளுக்கு 69 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இளைஞர் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கு மசீச கல்விப் பிரிவுத் தலைவர் சொங் சின் வூனும் பத்து தொகுதி இளைஞர் தலைவர் கோ கய்க் மெங்கும் களமிறங்கியுள்ளனர்.
நாளை மகளிர் பகுதி தேர்தல். அதில் ஒன்றும் பரபரப்பு இல்லை. நடப்பு உதவித் தலைவர் ஹெங் சாய் கை-யும் பினாங்கு பாரிசான் நேசனல் (பிஎன்) தகவல் தலைவர் டான் செங் லியாங்-கும் மகளிர் பகுதித் தலைவர் பதவிக்குப் போட்டி இடுகின்றனர்.
மிகவும் கவனத்தை ஈர்த்திருப்பது தலைவர் பதவிக்கான தேர்தல்தான்.
அது மும்முனைப் போட்டியாக அமைகிறது. துணைத் தலைவர் லியோ தியோங் லாய், உதவித் தலைவர் கான் பிங் சியு, முன்னாள் தலைவர் ஒங் தி கியாட் ஆகிய மூவரும் தலைவர் பதவிக்கான போட்டியில் குதித்துள்ளனர்.
துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வீ கா சியோங்-குக்கும் உதவித் தலைவர் டோனல்ட் லிம் சியாங் சாய்க்குமிடையில் நேரடிப் போட்டியாக இருக்கும்..