காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட ஆணைக்குழு

missing_people_001யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட ஆணைக்குழுவொன்றை அரசாங்கம் நிறுவத் தீர்மானித்துள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 11000 பேர் தொடர்பில் இந்த விசேட ஆணைக்குழு விசாரணை நடத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வு பெற்ற நீதவான் பராக்கிரம பரனகம இந்த ஆணைக்குழுவிற்கு தலைமை தாங்குகின்றார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சிவிலியன்கள் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட 11000 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காணாமல்போதல் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TAGS: