ஜனாதிபதி மகிந்தவிற்கும் – சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் இடையில் இந்த வாரம் சந்திப்பு!

sampatan-mahindaஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இந்த வாரம் இடம்பெறும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண சபை மற்றும் வட மாகாண ஆளுநர் உள்ளிட்ட பல விடயங்கள் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை பதிலளித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கண்ட அழைப்பை விடுத்தார்.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

TAGS: