ஐக்கிய நாடுகளுக்கு விளக்கமளிக்கும் இலங்கையின் பிரதிநிதியில் மாற்றம்! லலித் வீரதுங்க செல்கிறார்

lalith_weeratungaஇலங்கையில் நல்லிணக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் விளக்கமளிக்கவுள்ளார்.

இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்று இதனை குறிப்பிட்டுள்ளது.

சிவில் சேவையாளர் என்ற அடிப்படையில் லலித் வீரதுங்கவின் விளக்கங்கள் சர்வதேச அழுத்தங்களை குறைக்கக்கூடு;;;ம் என்ற அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கின்ற காரியங்கள் யாவும் உறுதிப்படுத்தப்படும்வகையில் காரணங்கள் முன்வைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

எனவே அதனை கருத்திற்கொண்டே லலித் வீரதுங்க மனித உரிமைகள் பேரவைக்கு செல்லவுள்ளார்.

வடமாகாண முதலைமைச்சர் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் சர்வதேசத்தில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

இராணுவ ஆளுநர் ஒருவர் வடமாகாணத்தை நிர்வகிக்கிறார்ää இராணுவ பிரசன்னம் குறையவில்லை. இராணுவம் பல பொதுத்துறைகளிலும் தலையிடுகிறது போன்ற குற்றச்சாட்டுக்களே அவையாகும்.

இந்தநிலையில் வழமையாக அமைச்சர் மஹி;ந்த சமரசிங்கவே மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் சார்பில் பங்கேற்று வந்தார்.

ஆனால அவர் அரசாங்கத்தின் ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் சர்வதேசத்தால் பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் அண்மையில் இலங்கைக்கு வந்துசென்ற ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசுசி அகாசியின் யோசனையின் பேரிலேயே லலித் வீரதுங்க அந்த இடத்தை நிரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் அதிகாரி ஒருவர் கூறும் கருத்துக்களை பொறுத்தவரையில் அவை இலங்கை மீது சர்வதேசத்தின் அழுத்தங்களை குறைக்கக்கூடும் என்று அகாசி தமது விஜய இறுதியில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

TAGS: