வார இதழான த ஹீட்- டுக்குத் தடை விதித்தது மனந் திறந்த விவாதங்களுக்கு இடமளிக்கும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்கிறார் யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா (யுஐஏ) விரிவுரையாளர் மஸ்லி மாலிக்.
அச் செய்தித்தாளுக்கு வாய்ப்பூட்டுப் போடும் நோக்கில் உள்துறை அமைச்சு அந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது என்றாரவர்.
“நிர்வாக, அரசியல் விவகாரங்களில் கருத்துச் சொல்ல ஊடகங்களுக்குச் சுதந்திரம் இல்லையென்றால், அரசாங்கத்தால் நாட்டை நேர்மையாகவும் நாகரிகமாகவும் ஜனநாயக முறையிலும் நிர்வகிக்க இயலாது”, என நேற்றிரவு தொடர்புகொண்டபோது மஸ்லி கூறினார்.
யாருக்கையா சொல்கிறீர்? அம்நோவுக்கா? அவன் எந்த மதத்தையும் கடைபிடிப்பவன் அல்ல. இஸ்லாத்திற்கு பெரிய அவமானத்தை தேடித்தந்து கொண்டிருக்கிறான்.