ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கையை ஆணையாளர் நவநீதம்பிள்ளை 2014 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதியன்று சமர்ப்பிக்கவுள்ளார்.
நாடுகளின் பிரிவு அட்டவணையின்போதே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கை விவாதத்துக்காக திறக்கப்படும் போது இலங்கை அரசாங்கத்தின் விமர்சனங்களும் கருத்துக்களும் கோரப்படும். 25வது மனித உரிமைகள் ஆணையக அமர்வுகள் எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதியன்று ஆரம்பமாகின்றன.
இறுதி நாளான மார்ச் 28 ஆம் திகதியன்று யோசனைகள் நிறைவேற்றப்படவுள்ளன.
ஏற்கனவே இந்த அறிக்கை வாய்மூலம் சமர்ப்பிக்கப்பட்டபோது மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை செய்யாவிட்டால் சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தார்.
இதேவேளை இலங்கைக்கு எதிராக யோசனையை அமெரிக்காவின் உதவியுடன் முன்வைக்கப் போவதாக பிரித்தானியா எச்சரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.