கனேடிய நா.ம உறுப்பினா் ராதிகா யாழில்: ஈ என மொய்க்கும் புலனாய்வு துறை !

rathika-jaffnaகனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார் என தெரிகிறது. எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையினில் தங்கி நிற்கும் அவர் யுத்த பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் நேரினில் பார்வையிட ஆர்வம் கொண்டுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள அவர் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமுள்ளிட்ட பல பகுதிகளையும் நேரினில் சென்று பார்வையிட்டார்.

குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலி.வடக்கு பிரதேசம் மற்றும் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள இடங்களை கூட்டமைப்பு சார்பு வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தன் நேரினில் அழைத்து சென்று காண்பித்தார்.

நாளை முல்லைதீவிற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே ராதிகா சிற்சபேசனது யாழ் பயணம் தொடர்பாக செய்தி சேகரிக்க முடியாத அளவிற்கு இராணுவப்புலனாய்வு பிரிவினர் ஈக்கள் போல மொய்த்து திரிவதாக தெரிவிக்கும் உள்ளுர் ஊடகவியலாளர்கள், அதே வேளை அவரையும் சிக்க வைக்க ஊடகங்களினில் புகைப்படங்களுடன் செய்திகளை அறிக்கையிட கோரிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்தத்தில் ராதிகாவை எவரும் அணுக முடியாத நிலை தோன்றியுள்ளது!

TAGS: