ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் எத்தனை யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் வடக்கில் உள்ள 10 ஆயிரம் படையினரை எந்த விதத்திலும் திருப்பி அழைக்க போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரித்தானியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளினால் முன்வைக்கப்பட உள்ள யோசனை வடக்கில் இராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்திய யோசனை என அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது.
எனினும் எந்த மேற்குலக நாட்டுடனும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் இணக்கப்பாடுகளுக்கு வரப்போவதில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
மேற்குலக நாடுகளின் சில தூதுவர்கள் எதிர்வரும் காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு சென்று வடக்கில் இராணுவ பிரசன்னம் குறித்து கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது.
இதன் முதல் கட்டமாக தென் ஆபிரிக்க தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.