கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனின் வருகையால், ஜெனீவாவில் பாரிய சவால்களை இலங்கை எதிர்நோக்க வேண்டியேற்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கனடாவில் குடியேறியுள்ள தமிழர்களிடம் வாக்கு சேகரிக்கும் நோக்கிலேயே ராதிகா சிற்சபேசன் இலங்கை வந்துள்ளார்.
கனடாவில் வட மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பலர் குடியேறியுள்ளதாகவும் அவர்களின் வாக்குகளைப் பெறவே ராதிகா வடக்கு பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த ஆண்டு இலங்கைக்கு ஜெனீவாவில் பாரிய சவால்கள் காணப்படுவதாகவும் அவற்றை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.
ஜெனீவாவில் இலங்கைக்கு பல நாடுகள் ஆதரவு தருகின்றமை பெருமைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியே ஆகட்டும்! எங்களைப் பொருத்தவரை அவரது வருகையின் மூலம் சில நல்ல காரியங்கள் நடக்கும் என எதிர்பார்க்கின்றோம்.