‘இந்தியாவின் தலையீட்டாலேயே 13-ம் திருத்தம் இன்னுமுள்ளது’

cpm_tna

சம்பந்தன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்

இலங்கையின் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாமல் செய்யும் இலங்கை அரசின் முயற்சிகளை இந்திய அரசு தலையிட்டே தடுத்து நிறுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்ததாக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் ஏ ஆறுமுகநயினார் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்களை இன்று சனிக்கிழமை சந்தித்து பேச்சுநடத்தியுள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னரான நிலைமையில், தமிழ் மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து இதன்போது பேசப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரின் பிரச்சனைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் பற்றியும் சம்பந்தன் விளக்கமளித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. -BBC

TAGS: