ஜெனீவா சவாலை எதிர்நோக்க பல நாடுகள் ஆதரவு!- இலங்கை அரசாங்கம்

uno_meetingஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான சவால்களை முறியடிக்க பல நாடுகள் ஆதரவளிக்கும் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

சீனா, ரஸ்யா, பாகிஸ்தான், கியூபா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரளிப்பதாக உறுதியளித்துள்ளன.

ஈராக் மற்றும் பாகிஸ்தானில் சிவிலியன்கள் கொல்லப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இம்முறை மனித உரிமைப் பேரவை மாநாடு சர்ச்சைகள் நிறைந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் 26ம் திகதி நவனீதம்பிள்ளை வெளியிட உள்ள அறிக்கைக்கு இலங்கை சவால் விடுக்க உள்ளது.

அறிக்கையின் உண்மை தன்மை குறித்து இலங்கையிடம் கேள்வி எழுப்பவில்லை என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

போர்க்குற்றச் செயல்களை நேரில் பார்த்த 2000 பேர் யார் என்பதனை வெளிப்படுத்த வேண்டுமென அரசாங்கம் கோரியுள்ளது.

TAGS: