கருணா, பிள்ளையான், கே.பி போன்று பதுமனையும் இலங்கை அரசு இணைத்துள்ளது!- வடமாகாண முதல்வர்

bathumanகருணா, பிள்ளையான், கே.பி ஆகியோரை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டது போன்று பதுமனையும் இலங்கை  அரசு தங்கள் பக்கம் இணைத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகிறது. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துக் கூறுகையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பதுமனின் தலைமையில் மீளக்கட்டி எழுப்பப்படவுள்ளதாகக் கூறி தனக்கு ஈமெயில் ஒன்று கிடைத்துள்ளது.

வடக்கில் இராணுவத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளையே அரசு முன்னெடுத்துள்ளது.

மேலும் கே.பி, கருணா, பிள்ளையான் ஆகியோரை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டது போன்று பதுமனையும் இலங்கை அரசு தனது பக்கம் இணைத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிவருகிறது.

யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் ஆகின்ற நிலையிலும் வடபுலத்தில் 150,000 படையினர் நிலைகொள்ளச் செயப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக பல பிரச்சினைகள் வடக்கில் எழுந்துள்ளன.

இவர்களால் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் அதிகளவான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் அவர்களால் தொழில் செய்யவும் முடியாத நிலையேற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

TAGS: