அமெரிக்க போர்க்குற்ற நிபுணர் – கோத்தபாய சந்திப்பு! நாளை யாழ். செல்கிறார்! விக்னேஸ்வரனை சந்திப்பார்!

stephen_j_rappஆறு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் போர்க்குற்ற நிபுணர்ர் ஸ்டீபன் ஜே. ராப் நேற்றுக் காலை கொழும்பு வந்தடைந்தார்.

இலங்கை வந்திருக்கும் இவரது முக்கிய சந்திப்புகள் மற்றும் வடக்கு விஜயம் ஆகியவற்றுக்கான ஒழுங்குகளை வெளிவிவகார அமைச்சு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை மேற்படி அமெரிக்கத் போர்க்குற்ற நிபுணர் ஜே. ராப்புக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்க நிபுணர் ஸ்டீபன் ஜே. ராப் இன்று சட்டமா அதிபர் பாலித்த பெர்னாண்டோவை சந்தித்து பேச்சு நடத்துவாரென வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நாளை புதன்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ள இவர் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, முதலமைச்சர் விக்கினேஸ்வரன், வட மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனல் உதய பெரேரா ஆகியோரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இதேவேளை வியாழக்கிழமையன்று இராணுவம் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் உயரதிகாரிகளையும், வெள்ளிக்கிழமையன்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமையும், சனிக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸினையும் இவர் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவாரெனவும் அமைச்சு வட்டாரங்கள் கூறின.

புதிய ஆதாரங்களை திரட்டும் நோக்கில் ஸ்டீபன் ஜே. ராப் இலங்கை விஜயம் செய்துள்ளார்

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் புதிய ஆதாரங்களை திரட்டும் நோக்கில் அமெரிக்காவின் போர்க்குற்றம் குறித்த பிரதிநிதி ஸ்டீபன் ஜே. ராப் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் மக்களின் போலியான தகவல்களின் அடிப்படையில் ராப் ஏற்கனவே போலி போர்க்குற்ற அறிக்கை ஒன்றை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ராப், போர்க்குற்றச் செயல்கள் தொடர்பிலான புதிய ஆதாரங்களை திரட்டும் பணிகளில் ஈடுபடுவார்.

போர்க்குற்றச் செயல்களை நேரில் கண்டதாக 30 பேர் தெரிவிக்க உள்ளனர்.இவர்கள் போலியான முறையில் சாட்சியமளிக்க உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

வடக்கிற்கு விஜயம் செய்யும் போது சத்தியக்கடதாசி மூலம் சாட்சியமளிக்கப்பட உள்ளது.

இதேவேளை, நீதியமைச்சர், சட்ட மா அதிபர் உள்ளிட்ட பலரை ரெப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

TAGS: