மன்னார் மனித புதைகுழி: இன்றும் 8 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

Thirukkeatheesvaram_06_01_13_03மன்னார், திருக்கேதீஸ்வரம்  பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழியில் இருந்து இன்று திங்கட்கிழமை மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த பகுதியில் இருந்து கடந்த 20ம் திகதியில் இருந்து கடந்த சனிக்கிழமை வரைக்கும் 18 மனித எலும்பு கூடுகள் மற்றும்  மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மன்னார் நீதிமன்றின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் சட்ட வைத்திய நிபுணர் டி. எல். வைத்தியரட்ண ஆகியோர் முன்னிலையில் மனித புதைகுழி தோண்டும் நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது புதிதாக 8 மனித எலும்புக்கூடுகள் கண்டபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஆறு வயது மதிக்கத்தக்க ஒருவரின் எலும்புக்கூடும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று வரை 26 மனித எலும்புக்கூடுகள் கண்டபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனித புதைகுழி தோண்டும் பணி மீண்டும் நாளை செவ்வாய்க்கிழமையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGS: