இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் இனப் படுகொலைக்காக நீதி வேண்டியும், அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், ஐ. நா. வினால் சர்வதேச வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் கனடியத் தமிழர்கள் முதற்கட்டப் போராட்டத்திற்கு தயாராகின்றார்கள்.
தொடர்ச்சியான போராட்டம்! அனைவரும் ஒன்றிணைந்து ஈழ விடுதலை நோக்கிப் போராடுவோம் ! வாருங்கள்!
முதலாவது போராட்டம்:
இடம்: அமெரிக்கத்துணைத் தூதரகத்திற்கு முன்பாக
காலம்: வெள்ளிக்கிழமை ஜனவரி.17 2014
நேரம்: மாலை பி.ப. 3:00 மணி தொடக்கம் மாலை 7:00 மணி வரை
அடுத்து வரும் கவனயீர்ப்புக்கான விபரங்கள்
• வெள்ளி Jan 24th – American Consulate, University Avenue
• செவ்வாய் Feb 4th – Sri-Lankan Consulate
• வெள்ளி Feb 14th – British Consulate
• வெள்ளி Feb 21st – Indian Consulate
• வெள்ளி Feb 28th – University Ave
• ஞாயிறு March 9th – மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்
உலகெங்கும் ஒரே காலத்தில் இனித் தொடர்ச்சியாக எமது போராட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் உலகத் தமிழுறவுகள் இந்தப் போராட்டங்களுக்கு வலுச்சேர்த்து வெற்றித் திசையில் பயணிக்க வைக்க வேண்டும்.
அந்த வகையில் அனைத்துலகத்திடம்:
இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் இனப் படுகொலைக்காக நீதி வேண்டியும்,
அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும்,
ஐ. நா. வினால் சர்வதேச வாக்கெடுப்பை நடத்தக் கோரியும்
வீழ்வது தோல்வி அல்ல. மீண்டும் எழாதிருப்பதே உண்மையான தோல்வி என்பதை உணர்ந்தவர்களாக தமிழீழம் காணும்வரை எம் போராட்டங்கள் இனி வெற்றிச் சரிதங்களாக வரலாறு படைக்க வேண்டும். மண்டியிடாத எம் இனம் மாண்டு போகாத வீரத்தோடு மீண்டும் போராடி தேசம் வென்றது என்ற சரித்திரத்தை விரைவில் படைத்தே தீரும். அதுவரை எழுகை கொண்ட தமிழர் போராட்டம் தொடர்ந்தே தீரும்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !
வீறுநடைகொண்டு ,புறப்படு தமிழா ,புறப்படு தமிழா ,வென்றெடுக்கும் காலமிது ,குருசேத்திரம் துவங்கிவிட்டது ,வெற்றித்தாய் நம்மை அழைக்கிறாள் ,ஈழத்தாயை நம் கையில் அளிக்க ,தமிழர்களின் சிந்தைகளும் ,சித்தாந்தங்களும் ,ஈழத்தின் ஒருவழிப்பாதையில் பயணிக்கட்டும் ,அனைத்து காதுகளிலும் ,ஈழம், ஈழம், ஈழம், ஈழம் ,என்று சங்கநாதத்தில் ரிங்காரமிடட்டும்,மாறுவோம் ஓயாத அலைகளாய் மாறுவோம் ,மாற்றுவோம் ஓயாத அலைகளாய் மாற்றுவோம் ,வாழ்ந்தால் மண்ணோடு ,வீழ்ந்தால் மானத்தோடு , அகதிகள் என்ற வார்த்தையை தமிழன் அகராதியிலிருந்து அகற்றுவோம் , எத்தனை ஆரியங்கள் நர்த்தனம் ஆடினாலும் ,ஈழத்தின் எல்லையை அடையும் இனமென்று உலகெங்கும் பறைசாற்றுவோம் ,வெற்றி நமதே, [ மலரட்டும் தமிழ் ஈழம் ].