கொத்தணிக் குண்டுகளையோ, இரசாயனக் குண்டுகளையோ தாம் போரில் பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்பிடம் நேற்று மன்னார் ஆயர், இதுபற்றிக் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய,
“இந்த வகையான குண்டுகளை நாம் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை.
கொத்தணிக் குண்டுகள் குண்டுகள் மற்றும் இரசாயன குண்டுகளை பயன்படுத்துவதற்கான ஆயுதங்கள் எங்களிடம் இல்லை.
விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தினோம்.
அதுவும், அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட குண்டுகளைக் கொண்டு, விடுதலைப் புலிகளின் சரியான இலக்குகளின் மீதே தாக்குதல்களை நடத்தினோம்.
இரசாயன குண்டுகளை விடுதலைப் புலிகளே பயன்படுத்தினர்” என்று கூறியுள்ளார்.
கடைசி கட்ட போரில் உயிரோடு தப்பித்து வந்தவர்களுடைய வாக்குமூலம் ஆதாரங்களுடன் இருக்கிறது.சிறிலங்கா அரசாங்கத்தின் பொய் செல்லாது! அதுவும் இவ்வளவு நாள்கள் கழித்து!முட்டாள் சிங்களவன் மீண்டும் மீண்டும் பயத்தில் உளறுகிறான்!
“பொய் சொல்வது எப்படி?” எனும் பாடத்தைப் படித்துகொடுக்கும் பல்கலைக்கழகம் கட்டுவதென்றால் ஶ்ரீலங்காவில் தலைமைப் பல்கலைக்கழகமும், மலேசியாவிலும் இந்தியாவிலும் துணைப்பல்கலைக்கழகமும் உருவாக்கி அதன் வேந்தனாக இந்தப் பொய்யனை நியமனம் செய்யலாம். உலகம் உருப்படும்!
உலக மக்கள் ஓர் ஆயரை நம்புவார்களா அல்லது ஒரு ராணுவப் பேச்சாளரை நம்புவார்களா?