பிரிவினைவாதம் பேசுவோர் அதன் விளைவுகளை சிந்திக்க வேண்டும்: பிரதமர் எச்சரிக்கை

dm_jayaratne001மிகச் சிறிய நாடான வெறும் மூன்று மில்லியன் தமிழ் மக்கள் வாழும் இலங்கையில் பிரிவினைக் கோரிக்கையை முன்வைப்போர் அதன் விளைவுகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென பிரதமர் டி.எம்.ஜயரட்ன எச்சரித்துள்ளார்.

பிரிவினை கோரிக்கையை தொடர்ந்தும் முன்வைப்போர் இன்று எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் பிரிவினைவாதிகளால் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இந்தியாவில் 7 கோடி தமிழர்கள் உள்ள போதும் அவர்கள் யாரும் தனிநாடு கோரவில்லை. ஆனால் மிகச் சிறிய நாடான இலங்கையில் மூன்று மில்லியன் தமிழ் மக்களே உள்ளனர். அவர்கள் பிரிவினையை கோரினால் நிலைமை என்னவாகும் எனவும் அவர் தெரிவிதார்.

தைப்பொங்கல் ஞாபகார்த்த முத்திரை அஞ்சல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் வைத்து பிரதமர் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.

இந்த  நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுயலாப நோக்கத்திற்காக மக்களிடையே குரோதங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக தமக்குத் தேவையானவற்றினைப் பெற்று தமது வாழ்க்கையினை முன்னேற்றிக் கொள்ளும் சிலர் இங்கு இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் மக்களுடைய முன்னேற்றத்தினைப் பற்றி பேசுவது மிகக் குறைவு.

நாட்டு மக்களை பிரிவுபடுத்தி, சமாதானத்தை சீர்குலைத்து, சமூகங்களை வேறுபடுத்தி, எங்களிடத்தில் பிரச்சினைகளை உருவாக்கி தங்களுடைய பலத்தினை இங்கு பிரயோகிக்க வெளிநாடுகளில் பல சக்திகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.

எங்களுடைய நாடு சிறந்த சிறிய நாடாகும். இங்கு 5 இனங்கள் வாழ்கின்றன. 3 மில்லியன் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் இந்தியாவினை எடுத்துப் பார்த்தால் அது மிகப் பெரிய நாடு. அங்கு 35 கோடியே 80 இலட்சம் தமிழ் மக்கள் வாழந்து வருகின்றார்கள்.(?) தனிநாட்டுக் கோரிக்கையினை அவர்கள் ஒருபோதும் முன்வைக்கவில்லை.

சிறிய நாடான இலங்கையில் பல பிரிவினைவாதிகள் தோன்றி பிரிவினைவாதத்திற்கு வித்திட்டுச் சென்றார்கள். எமக்குள் பிரிவினை ஏற்பட்டால் நாடு எதிர்காலத்தில் என்னவாகும்? எங்களுடைய சந்ததியினர் எதிர்காலத்தில் என்ன ஆவார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.

எகிப்து, சிரியா போன்ற நாடுகளில்  ஏற்பட்டுள்ள பிரிவினையால் கடந்த வாரத்தில் மட்டும் 9 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அந்த நாடுகள் மாதிரி, இலங்கையில் இவ்வாறான நிலை ஏற்பட்டால் என்னவாகும் என்று புத்திகூர்மைமிக்க தமிழ் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயத்தின் பெருமையையும், விவசாயத்திற்கு உதவி செய்கின்ற ஏனைய உயிரினங்களுக்கும் மதிப்பளிப்பதை உலகறிய வைக்கப்பட்டுள்ளது.

தைப்பொங்கல்  நிகழ்வு கொண்டாட்டம் ஆயிரக்கனக்கான வருடமாக இந்து மக்களிடையே இருந்து வருகின்றது. இம்முறை தற்போது சிங்கள மக்களிடையேயும் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இந்து, பௌத்தம் என்ற வகையிலே எப்ரல் மாதம் புதுவருடம் கொண்டாடப்படுகின்றது.

இந்து மக்கள் தைத்பொங்கல் தினத்தில் எவ்வாறான மத வழிபாடு, உணவு முறைகள் என்பவற்றிறை கடைப்பிடிக்கின்றார்களோ அதே போன்று சிங்கள மக்களும் எப்ரல் மாதம் நடைபெறும் புதுவருட நிகழ்வில் அந்த முறைகளை கடைப்பிடிக்கின்றார்கள். இது பௌத்த மதத்தலங்களில் மட்டுமல்லாமல் சிங்கள மக்களுடைய
வீடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதில் எந்த வேறுபாடுகளும் இல்லை.

இந்தவகையில் பார்க்கும் போது தமிழ் மக்களுடைய கலாச்சாரமும் சிங்கள மக்களுடைய கலாசாரமும் ஒத்தவகையில் இருப்பதைக் காணமுடிகின்றது. ஏனென்றால் இந்து மதமும் பௌத்த மதமும் இந்தியாவின் தம்பதீப என்ற இடத்தில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. பல்லாயிரக்கனக்காக வருடத்திற்கு
முன்னர் இந்தியாவில் இருந்து இந்து மக்கள் இங்கு வந்து குடியேறிய போது அவர்கள் மத ரீதியில் வேறுபட்டு இருந்தாலும் கலாசார ரீதியில் ஒன்றுபட்டே இருந்தார்கள்.

இந்து மதத்தினைச் சேர்ந்த தமிழ் மக்களாக இருந்தாலும், பௌத்த மதத்தினைச் சேர்ந்த சிங்கள மக்களாக இருந்தாலும் ஒரு நாட்டிற்குள் சகோதரத்துவமும், சமத்துவமும் கொண்ட ஒரு நாட்டு மக்களாக வாழவேண்டும் என்ற கோரிக்கையினை நான் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன். இந்த நாட்டின் ஜனாதிபதியும் சகல மதங்கள், இனங்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக உழைத்து வருகின்றார். இதற்கு ஒரு உதாரணமாக மக்களுக்காக தன்னையே தியாகம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினைக் குறிப்பிடலாம்.

இங்கு சிலர் இருக்கின்றார்கள். சுயலாப நோக்கத்திற்காக மக்களிடையே குரோதங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக தமக்குத் தேவையானவற்றினைப் பெற்றுக் தமது வாழ்க்கையினை முன்னேற்றிக் கொள்ளுகின்றார்கள். அவர்கள் அனைவரும் மக்களுடைய முன்னேற்றத்தினைப் பற்றி பேசுவது மிகக் குறைவு.

இந்த வகையில் நாட்டு மக்களை பிரிவுபடுத்தி, மக்களுடைய சமாதானத்தை குலைத்து, சமூதாயத்தினை வேறுபடுத்தி எங்களிடத்தில் பிரச்சினைகளை உருவாக்கி தங்களுடைய பலத்தினை இங்கு பிரயோகிக்க வெளிநாடுகளில் பல சக்திகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நாம் மறந்துவிடக் கூடாது.

30 யுத்தம் முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக அரசாங்கம் பாரிய அளவிலான நிதியினை ஒதுக்கியுள்ளது. அந்தவகையில் யுத்தத்திற்குப் பின்னர் மின்வசதிகள், பாதைவசதிகள், வைத்தியசாலைகள், நீர்பாசனங்கள் போன்றவற்றினை முன்னேற்றியுள்ளோம். என்னுடைய அமைச்சின் கீழ் 193 ஆலயங்களின் புனரமைப்பிற்கு நிதி ஒதுக்கியுள்ளேன்.

வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் இன்னும் நின்றுவிடவில்லை. அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. நான் கடந்த முறை யாழ்ப்பாணம் வந்திருந்த போது இங்குள்ள மக்கள் என்னிடம் ஒரு கோரிக்கையினை முன்வைத்திருந்தார்கள். தெற்கிலே இருக்கின்ற புகையிரதம் யாழ்ப்பாணத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று. வருகின்ற எப்ரல் மாதம் அந்தப் புகையிரதம் யாழ்.புகையிரத நிலையத்தினை வந்தடையும் என்ற நம்பிக்கையினையும் நான் இங்கு வெளியிட விரும்புகின்றேன்.

வடக்கில் நடைபெறுகின்ற ஒவ்வொரு அபிவிருத்தி மற்றும் முன்னேற்ற செயற்பாடுகளுக்கும் ஜனாதிபதிக்கு வழிகாட்டியாக இருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ், சிங்கள மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள் இரு மொழியினை கற்க வேண்டும் என்ற முறையினை ஏற்படுத்தியுள்ளோம். ஆனால் இங்கு உள்ள மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும இல்லை என்று நான் கூறவில்லை.

இதுதவிர இங்கு ஒருவர் கூறியிருக்கின்றார் ஒவ்வொரு கல்லறைகுள்ளும் ஒவ்வொரு இரகசியம் இருக்கிறது. அந்தக் கூற்றின் பொருள் என்னவென்றால் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றான். அவன் இறந்தால் கூட அந்தப் பிரச்சினை அவனை விட்டு விலகப் போவதில்லை. அது அவனுடன் இருந்து கொண்டே இருக்கின்றது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலே அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகிப்பார்கள், அவர்கள் அனைவருடைய கருத்துக்களையும் பெற்று இனப்பிரச்சினையினை தீர்பது தொடர்பாக முன்வைக்கலம்.

அக்கருத்துக்கள் ஆராயப்பட்டு சுமூகமான தீர்வு வந்ததன் பின்னர்தான் இந்த இனப்பிரச்சினைக்கான தீர்வினை ஜனாதிபதி முன்வைப்பார்.

படித்த மக்கள் எந்த ஒரு பிரச்சினையினைத் தீர்த்துக் கொள்வதற்காக சண்டையிட்டுக் கொண்டோ அல்லது போரிட்டுக் கொண்டோ இருக்க மாட்டார்கள். பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வார்கள். சுமூகமான கருத்துக்களை முன்வைத்து அதன் மூலம் வருகின்ற தீர்வினை வைத்துக் கொண்டுதான் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நிலையிலே தமிழ் மக்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

உலகிலேயே பழமையான இனமாக இந்து மதம் இருக்கின்றது. பழமையான இனமாக இந்து இனத்தவர்கள் இருக்கின்றார்கள். வேறு தொண்மையான மதமோ அல்லது இனமோ இல்லை.

புத்திக் கூர்மையுள்ளவர்களாக தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். எதிர்காலத்தினை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள இலங்கையர் என்ற ரீதியில் நல்ல கலந்துரையாடலினை முன்னெடுத்து அதன் மூலமாக தீர்வினைப் பெற்றுக் கொள்ளுவோம்.

இந்து மதத்தினைரைப் பார்த்து கோபத்துடனோ அல்லது, சந்தேகத்துடனோ பார்க நாங்கள் விரும்புவதில்லை. சகோதர இனத்தவர்கள், நண்பர்கள் என்ற வகையிலேயே அவர்களை நாங்கள் பார்க்கின்றோம். தென்பகுதியில் இருக்கின்ற தமிழ் மக்களுடன நாங்கள் எந்தவிதமான பேதங்களும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம். என்னுடைய தனிப்பட்ட செலவில் இந்து ஆலயம் ஒன்றினை நிர்மானித்துள்ளேன். எங்களிடம் எந்த பேதமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

TAGS: