இலங்கையின் வடபகுதியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக பெரிய அளவில் சோபிக்கவில்லை என்று அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
எனினும் நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. ஆலயங்களில் விசேட பொங்கல் மற்றம் வழிபாடுகள் என்பன நடைபெற்றிருக்கின்றன.
மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் தமிழர் திருநாளாகிய இன்று பொங்கல் வைக்கப்பட்டு விசேட ஆராதனைகளும் நடைபெற்றிருக்கின்றன.
இம்முறை சரியாக மழை பெய்யவில்லை, விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்றும் அதன் காரணமாகவே பொங்கல் இம்முறை சோபிக்கவில்லை என்று வட மாகாணத்திலுள்ள பல விவசாயிகள் கூறுகின்றனர்.
பருவம் தப்பி மழை பெய்த காரணத்தினால் சிறிய அளவில் தப்பிப் பிழைத்துள்ள வயல்களில் அறுவடையும் இம்முறை பிந்தியிருக்கின்றது என்று எமது செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார்.
கடந்த வருடம் அறுவடை காலத்தின் போது பெய்த கடும் மழை, வெள்ளம் காரணமாக அறுவடை பெருமளவில் பாதிக்கப்பட்டது, விவசாயிகளும் நட்டமடைந்தார்கள். இதனால் வங்கிகளில் பெற்ற கடன்களை அடைக்கமுடியாத நிலையேற்பட்டது.
இருந்தும், மேலும் கடன்பட்டு செய்த விவசாயமும் வறட்சியினால் இந்த வருடம் பாதிக்கப்பட்டிருப்பதனால் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் விவசாயிகள் கவலையடைந்திருப்பதாக பல விவசாயிகள் கூறுகின்றார். -BBC