மனிதஉரிமை மீறல்கள் புள்ளிவிபரங்களை சர்வதேசத்திடம் முன்வைத்துள்ளோம்!- விக்ரமபாகு கருணாரட்ன

wickramabakhuஇலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் உண்மையான புள்ளிவிபரங்களை சர்வதேசத்திடம் முன்வைத்துள்ளோம். ஜெனிவா கூட்டத்தொடரின் போது அரசை தோல்வியடையச் செய்ய வேண்டுமாயின் வடக்கு தமிழ் அரசியல் கட்சிகள் தென்னிலங்கை அரசியல் அமைப்புகளுடன் இணைய வேண்டும் என நவ சமசமாஜக் கட்சி தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

ஆகவே, ஜெனிவா மனித உரிமை பேரவையின் போது அரசாங்கம் நிச்சயம் தோல்வி காணும். இவ்வரசின் செயற்பாடுகளை தாங்கள் சர்வதேசத்திடம் வழங்கியிருப்பது அரசை தோல்வியடைய செய்வதற்காகவே என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கேசரிக்கு கருத்து தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் யுத்தத்தின் போது மனித உரிமைகளை மீறியதுடன் வடக்கு தமிழ் மக்கள் மற்றும் நடாளாவிய ரீதியில் சிறுபான்மை இனத்தவர்கள் தொடர்பான போலியான புள்ளிவிபரத் தரவுகளை முன்வைத்துள்ளது.

இந்நிலையில் இத்தரவுகளை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு நன்றாக தெரியும்.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சர்வதேசத்திடம் வழங்கியுள்ளோம் என்றார்.

TAGS: