இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பாரிய பிரச்சினை ஏற்படும்- ஐ.தே.க

laxman_giriyella_001ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பாரியளவில் பிரச்சினைகள் ஏற்படக் கூடுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துதுள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஏற்கனவே இரண்டு தடவைகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அல்லது பாரிய பின் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்.

1988 மற்றும் 1989ம் ஆண்டுகளில் இடம்பெற்ற பிரச்சினைகள் குறித்து அப்போதைய அரசாங்கம் சர்வதேசத்துடன் பேசி இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டது.

இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் மோதுவதற்கே முயற்சித்து வருகின்றது.

கடந்த மனித உரிமைப் பேரவை மாநாட்டில் 100 இலங்கைப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள் ஜெனீவாவில் அநாகரீகமாக நடந்துகொண்டனர்.  இறுதியில் அவர்கள் அமைதியாக நாடு திரும்ப நேரிட்டது.

இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் நாட்டுக்கு பாரியளவில் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

சர்வதேச தலையீட்டுக்கு இலங்கை அரசாங்கமே வழியமைத்துக் கொடுக்கின்றது என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

TAGS: