இறுதிப்போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை என்பதை கணக்கெடுப்பு உறுதிப்படுத்தும்!- அமைச்சர் சமரசிங்க

mullivaikkaal_murdersவடக்கு கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆள் மற்றும் சொத்து இழப்புக்கள் குறித்த கணக்கெடுப்புகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இறுதிப்போரின் போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவல் பிழை என்பதை இந்த கணக்கெடுப்பு உறுதிப்படுத்தும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு திணைக்களம் தற்போது வடக்குகிழக்கில் கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது.

இறுதிப்போர் இடம்பெற்ற வேளையில் யாரும் அங்கு சென்று எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பதை யாரும் கணக்கிடவில்லை.

எனவே ஐக்கிய நாடுகளின் அறிக்கை பிழையானது.

இந்தநிலையில் எதிர்வரும் மார்ச்சில் சவால்களை சந்திக்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

TAGS: