ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதற்கு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சில மேற்குலக நாடுகள் புலி ஆதரவாளர்கள் உத்தியோகபூர்வமா மாநாட்டில் பங்கேற்பதற்கு அனுமதியளித்துள்ளன.
இந்த நடவடிக்கையானது முழுமையாக சட்ட விரோதமானது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு இது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
கொலையாளிகளும் மனித உரிமை ஆர்வலர்களாக மாநாட்டில் பங்கேற்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு புலி ஆதரவு புலம்பெயர் அமைப்புக்கள் மாநாட்டில் உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.