ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் எந்த தயங்கமும் இன்றி, இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்கப்படும் என இலங்கைக்கான சீன தூதுவர் ஜீ ஹெங் ஹோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் இலங்கை அரசும், நாட்டு மக்களும் பெற்றுள்ள முன்னேற்றத்தை சீனா ஏற்றுக்கொள்கிறது.
ஏனைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இலங்கைக்கு காலமும், சந்தர்ப்பமும் வழங்கப்பட வேண்டும். இலங்கையும் சீனாவும் மிக நீண்டகால நண்பர்கள். தேவையான சந்தர்ப்பத்தில் இருக்கும் நண்பனே உண்மையான நண்பன்.
அதேவேளை சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை சம்பந்தமான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அது முடிவடைந்ததும் உடன்படிக்கையில் கையெழுத்திடப்படும்.
இந்த வர்த்தக உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக அமையும் என்றார்.
முள்ளமாரியும் , முடிச்சு அவிகையும் . ரத்தப்பசிகொண்டவனும், குள்ளநறியும் சினேகிதமாம். அழிவுக்காலம் அருகில் வரும் .
இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவோம் என்றால் ,துரோகத்திற்கு துணை போவோம் என்பதே புத்த மைந்தர்களின் கூற்று , உலக தமிழர்கள் அனைவரும் சீன பொருள்கள் அனைத்தும் புறக்கணிப்போம் ,மாறுவோம் மாற்றுவோம் .
அதனால்தான் ரசாயன வெடிகுண்டுகளை கொடுத்து ஈழ மக்கள் படுகொலையை வெற்றிகரமாக நடத்தினோம்.எங்களுக்கு வேண்டியதெல்லாம் இந்திய சமுத்திரத்தில் ஒரு தளம்.முட்டாள் இந்திய,அமெரிக்க மற்றும் எனைய பொறம்போக்குகளும் துணையாக வந்தனர் எங்களுடன்.நாங்கள் எல்லாவற்றையும் தமிழனிடமிருந்து கற்றுக்கொண்டு தமிழனுக்கே ஆப்பு வைத்துவிட்டோம் ஹஹஹ……….!