ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பலப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை பழி தீர்க்கவில்லை.
அவர் எமது குடும்பங்களின் பிள்ளைகளை பழி வாங்கவில்லை. நாட்டின் இன்றைய ஆட்சியாளர் பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்கும் பெறுமதியற்றவர்.
நாங்கள் பயந்தவர்கள் என ஆட்சியாளர்கள் எண்ணுகின்றனர். சிறைச்சாலைக்கு செல்லும் நாங்கள் அஞ்சவில்லை.
எனது மூத்த புதல்வியின் கணவரை கடந்த ஆறு வருடங்களாக காண முடியவில்லை. இந்த பிரச்சினையை நாங்கள் எதிர்காலத்தில் தீர்ப்போம்.
அபுதாபி நாட்டில் அன்று வாடகை காரை ஓட்டிய ஒருவருக்கு இன்று நான்கு விமானங்கள் இருக்கின்றன.
இந்த மோசடிகளை செய்தவர் என்றாவது அதன் பிரதிபலனை அனுபவிப்பார். அவர் என்றாவது நரகத்தில் வாடகை காரை ஓட்ட வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.
வீரத்திற்கு பெருமை சேர்த்த வீரபிதாமகனே, எதிரியும் போற்றும் ஒப்பற்ற மறவசரித்திரமே , தமிழ் இனத்தின் தலைமகனே இனசரித்திரமே ,அண்ணன் [ பிரபாகரன் அவர்களே ], எதிரி கூட உன்னை விலை மதப்பற்ற பொக்கிஷம் என்று போற்றுகிறார்கள் , என்றும் எங்கள் இதயத்தில் குடியிருப்பாய் நீ ,சரித்திரசான்றில் அழியா புகழுடன் என்றும் சிகரத்தின் உச்சியில் , நீ வருவாய் என்று வழிமேல் ,விழிவைத்து காத்திருப்போம் ,எங்கள் இதயம் துடிக்கும் வரை , [ மலரட்டும் தமிழ் ஈழம் ].