வடக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னம் 12 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக பொய்யுரைத்துள்ளதாகவும், வடக்கில் 16 முதல் 19 வரையான படைப் பிரிவுகள் நிலைகொள்ள செய்யப்பட்டுள்ளதாகவும் ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், தெல்லிப்பழையில் நேற்று யாழ் புற்று நோய் வைத்தியசாலையை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி வடக்கில் 12 ஆயிரம் இராணுவத்தினரே இருப்பதாக கூறியிருந்தார்.
போர் நடைபெற்ற காலத்தில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை இருந்த இராணுவத்தினர் தற்பொழுது 12 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி கூறினார்.
எனினும் போர் முடிவுக்கு வந்த பின்னரும் அரசாங்கம் இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து, இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 2009ம் ஆண்டு இராணுவத்தினரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சமாக இருந்தது. தற்பொழுது அந்த எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
வடக்கில் 16 இராணுவப் படைப் பிரிவுகள் மற்றும் அதிரடிப்படை முகாம்கள் என 19 படைப் பிரிவுகள் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
ஒரு இராணுவப் படைப் பிரிவுக்கு 10 ஆயிரம் பேர் என்ற கணக்கில் 16 இராணுவப் படைப் பிரிவுகளில் வடக்கில் மொத்தமாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தில் இரண்டாவதாக பெரும் தொகை நிதி பாதுகாப்பு அமைச்சுக்கே ஒதுக்கப்படுகிறது.
வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்து சிவில் அமைப்புகளுக்கு சிவில் நிர்வாகத்தை ஒப்படைக்குமாறு உள்நாட்டிலும், சர்வதேசத்தில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும் வடக்கு மாகாணத்தில் சிவில் விவகாரங்களில் இராணுவம் முக்கிய பங்கை வகித்து வருகிறது.
பாதுகாப்பு படைகளின் தலைமையகம்- யாழ்ப்பாணம்
51 வது படைப் பிரிவின் யாழ்ப்பாண தள முகாம்.
52 வது படைப் பிரிவின் யாழ்ப்பாண குடா முகாம்.
55 வது படைப்பிரிவின் ஆனையிறவு முகாம் (3)
பாதுகாப்பு படைகளின் வன்னி தலைமையகம்
56 வது படைப் பிரிவின் வவுனியா மாவட்ட முகாம்.
61 வது படைப் பிரிவின் வவுனியா மாவட்ட முகாம்.
21 வது படைப் பிரிவின் முகாம்.
படைகளின் பிராந்திய தலைமையகம் – மன்னார்
பாதுகாப்பு படைகளின் தலைமையகம் – கிளிநொச்சி
57 வது படைப்பிரிவின் கிளிநொச்சி மாவட்ட முகாம்.
3வது அதிரடிப்படைப் பிரிவு – கிளிநொச்சி.
7வது அதிரடிப்படைப் பிரிவு – கிளிநொச்சி.
66 வது படைப் பிரிவின் கிளிநொச்சி மாவட்ட முகாம்.
68 வது படைப் பிரிவின் கிளிநொச்சி மாவட்ட முகாம்.
பாதுகாப்பு படைகளின் தலைமையகம் – முல்லைத்தீவு
59 வது படைப் பிரிவின் முல்லைத்தீவு மாவட்ட முகாம்.
2வது அதிரடிப்படைப் பிரிவு முல்லைத்தீவு.
64 வது படைப் பிரிவின் முல்லைத்தீவு மாவட்ட முகாம்.
65 வது படைப் பிரிவின் துணுக்காய் – முல்லைத்தீவு முகாம்.
53 வது படைப் பிரிவின் மாங்குளம் தள முகாம்.
58வது படைப் பிரிவின் பரந்தன் தள முகாம் மற்றும் அதிரடிப்படை முகாம் ஆகிய படைத் தளங்கள் வடக்கில் இருப்பதாக அந்த ஆங்கில இணைத்தளம் தெரிவித்துள்ளது.
இன்னும் எத்தனை காலத்திற்கு உலகத்தை ஏமாற்றுவார் இந்த மாபெரும் நடிகர்.