இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்த விசேட அமெரிக்க பிரதிநிதி நியமனம்

america_flagஇலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்தும் நோக்கில் அமெரிக்க அரசாங்கம் விசேட பிரதிநிதி ஒருவரை நியமித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது.

போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தவும், தீர்மானம் நிறைவேற்றவும் சமேலா கே ஹெமாமோட்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

அய்லீன் மன்னோய் என்ற பிரதிநிதியே, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளும் ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் கோரியுள்ள போதிலும், அமெரிக்கா அதனை உதாசீனம் செய்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் திகதி இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

TAGS: