அல்லாஹ் சர்ச்சைமீது நோ-காலிட் விவாதம் இரத்து

allah‘அல்லாஹ்’ சர்ச்சை  தொடர்பில்  சிலாங்கூர்  அம்னோ  தலைவர்  நோ  ஒமாருக்கும்  மாநில  பாஸ் தலைவர்  காலிட்  சமட்டுக்குமிடையில்  நடைபெறவிருந்த  விவாதம்  இரத்துச்  செய்யப்பட்டது. 

மலாய்   நாளேடான   சினார்  ஹரியான்  ஏற்பாட்டில் இன்று  பிற்பகல்  மணி  2க்கு  அது  நடப்பதாக  இருந்தது. ஆனால், அது  இரத்துச் செய்யப்படுவதாக  நேற்றிரவு  அறிவிக்கப்பட்டது. 

சமயத்  தலைவர்கள் பலரும்  என்ஜிஓ-களும்  அக்கறை   கொண்ட  பொதுமக்களும்  அது  நடப்பதை  விரும்பவில்லை.

“மக்களின்  உணர்வுகளுக்கு  மதிப்பளித்து  அம்முடிவு  எடுக்கப்பட்டதாக”, அந்நாளேட்டை  நடத்தும்  காராங்கிராப்  மீடியா குருப்  ஓர்  அறிக்கையில்  கூறியது.